கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் பல வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் உள்ள காணி ஒன்றின் கிணற்றில் மேற்கொள்ளப்பட்ட துப்புரவு பணிகளின் போது இந்த வெடிப்பொருட்கள் கண்டறியப்பட்டன.
இது தொடர்பில், காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
யுத்தகாலத்தின் போது, குறித்த வெடிப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.