சட்டவிரோத சிகரெட்களை கடத்த முயன்றவர் கைது

0
128
டுபாயில் இருந்து நாடு திரும்பிய இலங்கை பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 2.1 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சிகரெட்களை கடத்த முற்பட்ட போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகத்தின் பேரில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகள் அந்த பயணியை சோதனையிட்டனர், அவரது பைகளில் இருந்து 21, 400 மான்செஸ்டர் மற்றும் கோல்ட் லீஃப் சிகரெட்கள் கண்டுபிடிக்கப்பட்டன, இது இலங்கையில் விற்பனை மற்றும் நுகர்வு தடைசெய்யப்பட்டுள்ளது.முதற்கட்ட விசாரணைகளை அடுத்து, சந்தேகநபர் நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் டுபாயில் உள்ள உணவகம் ஒன்றில் சமையற்காரராகப் பணியாற்றியவர் என பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர் கடத்தல் பொருட்களுடன் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்