மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியில் விபத்து: இளம் ஆசிரியர் பலி

0
78

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில், புனானைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் ஆசிரியரொருவர் உயிரிழந்துள்ளார்.
பரிகாரியார் வீதி ஓட்டமாவடியைச் சேர்ந்த ஸர்பராஸ் ஹிசை முகம்மது அஸாம் என்பவரே உயிரிழந்தவராவர்.
றிதிதென்னையில் வசிக்கும் தனது தந்தையாரை பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கிப்
பயணித்த தனியார் பேருந்துடன் மோதுண்டு விபத்துச் சம்பவித்துள்ளது.
விபத்துத் தொடர்பில் தனியார் பேருந்து சாரதி கைது செய்யபட்டுள்ளார்.
வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.