இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

0
205

இலங்கை மத்திய வங்கி, ரூபா அடிப்படையிலான கடனுக்காக அறவிடப்படும் அதிகபட்ச வட்டி வீதத்தை வெளிப்படுத்தும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் இலங்கை ரூபாவின் அடிப்படையிலான கடனுக்கான வட்டிவீதம் மாற்றப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் உத்தரவின்படி, அனைத்து வணிக வங்கிகளும் பல கடன் சேவைகளின் வட்டி விகிதங்களை பின்வரும் குறைந்தபட்ச விகிதங்களுக்கு குறைக்கவேண்டும்.

அடைமானக் கடனுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 18 வீதமாக குறைக்கப்படவேண்டும்.

வங்கி மிகைப்பற்றுக்கு வசூலிக்கப்படும் வருடாந்திர கடன் வட்டி விகிதம் 23 வீதமாக குறைக்கப்படவேண்டும்.

கடனட்டை மூலம் ரொக்க முன்பணத்திற்கு வசூலிக்கப்படும் வருடாந்திர வட்டி விகிதம் 28 வீதமாக குறைக்கப்படவேண்டும்.