களனிமுல்ல பிரதேசத்தில், உத்தரவை மீறி செலுத்திய சென்ற மோட்டார் சைக்கிள் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இன்று மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் அவசர வீதித் தடையை ஏற்படுத்தி வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்த போதே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முதலில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சைகை செய்துள்ளனர்.
எனினும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் அதனை மீறி சென்றமையால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் முல்லேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.