கைத்தொழில் உற்பத்தி கண்காட்சி யாழில் இடம்பெற்றது

0
68


ஏற்றுமதிசார் உற்பத்திப் பொருளாதாரத்தை பலப்படுத்தும் நோக்கில் Industry Jaffna Edition-2023-2023 கைத்தொழில் உற்பத்தி கண்காட்சி யாழில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

கைத்தொழில் அமைச்சும், கைத்தொழில் அதிகாரசபையும் இணைந்து Getup Startup For A Wealthy Nation என்ற வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய கலாசார மத்திய நிலைய வளாகத்தில் கடந்த 1,2 மற்றும் 3 ஆகிய திகதிகளில் இந்நிகழ்வை முன்னெடுத்தன.

ஏற்றுமதி சார்ந்த உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்லும் வகையில் இலங்கையில் உள்ள 20 தொழிற்சாலைகளில் 300க்கும் மேற்பட்ட காட்சியறைகளில் புத்தாக்கங்கள் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பல புதிய தொழில்கள் மற்றும் வடமாகாணத்திற்கே உரித்தான பல கைத்தொழில்கள் என்பன குறித்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஸ் பத்திரன மற்றும் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.