மன்னார் தட்சனாமருதமடு மகா வித்தியாலய மாணவி யோ.சுடர்மதி, வடக்கு மாகாண பாடசாலை மட்ட தடகள போட்டியில், புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகள போட்டி, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில், நேற்று இடம்பெற்ற 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 300 மீற்றர் தடை தாண்டல் போட்டியில், மன்னார் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட தட்சனாமருதமடு மகா வித்தியாலய மாணவி யோ.சுடர்மதி, புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
2018 ஆண்டு இடம்பெற்ற போட்டியில், மாணவி ஒருவர், 51.7 செக்கன்களில், 300 மீற்றர் தடை தாண்டலை முடித்து சாதனை நிகழ்த்தியிருந்தார்.
ஆனால், மன்னாரைச் சேர்ந்த யோ.சுடர்மதி, 50.08 செக்கன்களில், 300 மீற்றர் தடை தாண்டலை நிறைவு செய்து, புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.