2ஆவது நாளாகவும் தொடரும் சத்தியாக்கிரகப் போராட்டம் !

0
71
சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை பதவி விலகுமாறு கோரி சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் அமைப்பு, என்னால் தாய்நாட்டுக்கு அமைப்பு மற்றும் சில அரசியல் அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை நேற்று ஆரம்பித்தன.சுகாதார அமைச்சர், செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரை பதவி விலகுமாறு கோரி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் பதவி விலகும் வரை தாம் சத்தியாக்கிரகப் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.