28.5 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சுகாதார அமைச்சு மீது குற்றச்சாட்டு

சுகாதார அமைச்சு கண்வில்லைகளை அவசரமாக கொள்வனவு செய்வதற்கு முயற்சிப்பதாக சுகாதார மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அதன் செயலாளர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுகாதார அமைச்சு மீண்டும் அவசரமாக கண் வில்லைகளை கொள்வனவு செய்வதற்கு முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விலை மனுத் தாக்கல் செய்துள்ள நிறுவனங்களுக்கு குறித்த பணிகளை பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும் சத்திர சிகிச்சைகளுக்கான உபகரணங்கள், மயக்க மருந்து மற்றும் இரசாயன ஆய்வு கூடத்துக்கான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு இவ்வாறான முறைமை ஒன்று இல்லை.

அரசியல் தரப்பினர் மாத்திரமின்றி சிறந்த கல்வி தகைமைகளை நிறைவுசெய்து சுகாதார அமைச்சில் பணியில் ஈடுபடுகின்ற அதிகாரிகளாலும் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக சுகாதார மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles