கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, விவசாய அமைச்சு ஆகியன இணைந்து, யாழ்ப்பாணத்தில் பாடசாலை ரீதியிலான வீட்டுத்தோட்ட செயற்பாடுகள் வீட்டுத்தோட்ட போட்டிகள் மற்றும் கண்காட்சி நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.
மல்லாவி மத்திய கல்லூரியில் எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் கண்காட்சி நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு வட மாகாண பிரதம செயலர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.
குறித்த ஊடக சந்திப்பில், வடமாகாண பிரதம செயலர் சமன் பந்துலசேன, வடமாகாண விவசாயம், கால்நடை மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலர் மரியநாயகம், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன் ஆகியோர் வீட்டுத்தோட்ட போட்டிகள் மற்றும் கண்காட்சி தொடர்பில் விளக்கமளித்திருந்தனர்.