அம்பாறை திருக்கோவிலில் உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்தால், உதவிகள் வழங்கப்படவுள்ளன

0
138

அம்பாறையில் உலக உணவுத் திட்டத்தின் ஊடாக, அரசாங்கத்தின் இ.ஆர்.பி வேலைத்திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு
உலருணவுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன.
தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு உட்பட கிராம சேவையாளர்கள் பிரிவில், பயனாளிகளின் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.
பயனாளிகளை தெரிவு செய்வது தொடர்பில், கிராம மட்ட கள உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு திருக்கோவில்
பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அனோஜா உஷாந், உலக உணவு நிகழ்சித் திட்ட அதிகாரிகள்
என பலரும் செயலமர்வில் பங்கேற்றனர்.