28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

டெங்கு காய்ச்சல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் டெங்கு நோய் பரவல் 30 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 2 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 684 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் எனவும், கடந்த வாரத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்டவர்களில் 48.2 வீதமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 146 டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 65 ஆயிரத்து 479 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் அது டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் எனவும், உடனடியாக வைத்தியரை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles