பஸ் சாரதி குறட்டை! முள்ளியில் பயணிகளுடன் பஸ் தடம்புரண்டது.

0
129

கொடிகாமம் – பருத்தித்துறை பயணிகள் பஸ்ஸொன்று காலை முள்ளிப்பகுதியில்வீதியை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது.

பயணிகளுடன் கொடிகாமத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளை சாரதியின் நித்திரை காரணமாக பஸ் தடம்புரண்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் போது சில பயணிகளுக்கு காயமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.