கடந்த சில மாதங்களில் 800 பயணங்கள் இரத்து!

0
93
கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள் உள்ளிட்ட ரயில்வே ஊழியர்கள் மாதத்தின் கடைசி வாரத்தில் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் மட்டும் 800 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் குறைந்தது 6 நாட்கள் சுகயீன விடுப்பு எடுத்து பணிக்கு வருவதில்லை என்றும், பணிக்கு வராததால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் இருப்பதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார் .கடந்த 9 மாதங்களில் 800க்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வாரத்தின் கடந்த 4 நாட்களில் மட்டும் 40க்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாகவும் அவர் தெரிவித்தார்.
, ரயில்வே ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், அவர்கள் மறைமுகப் பணிகளிலும், கூடுதல் பணிகளிலும் ஈடுபட வேண்டியுள்ளது. இதனால், ரயில்வே ஊழியர்கள் வார இறுதி நாட்களிலோ, மாத இறுதியிலோ பணிக்கு வருவதில்லை. காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படாமை, பதவி உயர்வு வழங்காமை போன்ற பல காரணங்களால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.