மட்டக்களப்பு தரவை துயிலுமில்ல பணிக்குழாமினரால், துயிலுமில்ல முதற்கட்ட சிரமதானப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.
இரண்டாவது கட்டமாக எதிர்வரும் சனிக்கிழமையும் சிரமதானப் பணிகள் இடம்பெறவுள்ளன.
துயிலுமில்ல பணிக்குழாமின் தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற சிரமதானப் பணியின் போது, பணிக்குழாம் உறுப்பினர்கள், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உப தலைவர் நகுலேஸ் உட்பட பலரும் பங்கேற்றனர்.