உலக நீரழிவு தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவடிவேம்பு வைத்தியசாலை நிர்வாகத்தினால் நேற்று விழிப்புணர்வு நடைபவனி இடம்பெற்றது.
சமூகங்களுக்கு இடையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் ஆரம்ப சுகாதார சேவையினை வலுப்படுத்தும் செயற்திடத்தின் ஊடாக நடைபவனி இடம்பெற்றது.
மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் இருந்து ஆரம்பமான நடைபவனியானது, பிரதான வீதி வழியாக வந்தாறுமூலை பொதுச் சந்தைக்கு முன்பாக கூடி மீண்டும் பிரதான வீதி
ஊடாக சென்று வைத்தியசாலையை அடைந்தது.
மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி தனுசியா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட நடைபவனியில், மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலை வைத்தியர்கள்,
தாதிய உத்தியோகஸ்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், கிராம நலன் விரும்பிகள், முன்னாள் ஏறாவூர் பற்றுப் பிரதேச சபை உறுப்பினர்
புத்திசிகாமணி சசி உட்பட பலரும் கலந்து கொண்டனர்