புலமைப்பரிசில் பெறுபேறுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை!

0
219

2023ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடுத்த வாரம் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போது பெறுபேறுகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு 2888 பரீட்சை மத்திய நிலையங்களில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 591 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.