அம்பாறை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு புதிய பணிப்பாளர்!

0
117

அம்பாறை கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட டொக்டர் சஹீலா இஸ்ஸதீன் இன்று தனது கடமைகளை
பொறுப்பேற்றுக் கொண்டார்.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் துறைசார் வைத்திய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களினால் அவருக்கு
வரவேற்பளிக்கப்பட்டது.
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றி வந்த டொக்டர் ஏ.எல்.எம்.றிபாஸ், வருடாந்த இடமாற்றத் திட்டத்தின் பிரகாரம் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக இடமாற்றப்பட்ட நிலையில், கல்முனையில் கடந்த சில மாதங்களாக பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றிய டொக்டர் சஹீலா இஸ்ஸதீன்
கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளரினால், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.