யாழ்ப்பாண சிறைச்சாலையில் 16 கைதிகள் விடுவிப்பு!

0
154

நத்தார் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்,

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் நத்தார் பண்டிகைக்காக 1004 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ள நிலையில்

989 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் விடுதலை செய்யப்படவுள்ளனர்

அந்த கைதிகளுக்கு நிபந்தனைகள் மற்றும் வரம்புகளுக்கு உட்பட்டு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று கூறிய அவர் மேலும், நாளை (25) நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலையிலிருந்தும் பொதுமன்னிப்புக் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளநிலையில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் காலை 9 மணிக்கு 16 கைதிகளும் விடுதலை செய்யப்படவுள்ளனர்,