ஆழிப்பேரலையின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கிலும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, உடுத்துறை சுனாமிப் பொது நினைவாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுத் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
நிகழ்வில் தேசிய கொடியும் ஏற்றப்பட்டதுடன், பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மாலையிட்டு சுடரேற்றி உணவுகளை படைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் மதகுருமார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், பெருமளவான பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.