28.6 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வடமராட்சி கிழக்கு கேவில் பகுதியில், மீன்பிடி உபகரணங்கள், விசமிகளால் தீயிட்டு எரிப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கேவில் கடற்றொழிலாளர்கள் சங்கத்திற்குட்பட்ட, இரண்டு மீனவர்களுக்கு சொந்தமான இரண்டு படகுகள் மற்றும் ரூபா 14 இலட்சம் பெறுமதியான வலைகள், விசமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

நேற்று நள்ளிரவு, கேவில் பாலையடி மேற்கு களப்பில், இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு இடம்பெற்ற, கேவில் கடற்றொழிளாளர்களின் கூட்டத்தில், இறால்களின் இனப் பெருக்கத்திற்காகவும், இறாலின் வளர்சியை அதிகரிப்பதற்காகவும், இறால் கூடு கட்டுவது தற்காலிமாக தடை செய்யப்பட்டது.

இந்த தடையை மீறி தொழிலில் ஈடுபட்ட பலரின் உபகரணங்கள் கைப்பற்றப்பட்ட போதும், விசமி ஒருவர், இரண்டு மீனவர்களுக்கு சொந்தமான மீன்பிடி உபகரணங்களை தீயிட்டு எரித்துள்ளதாக, கேவில் கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அதனையடுத்து, சம்பவம் தொடர்பில், மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles