


வவுனியா மேல் நீதிமன்றில் 2023ஆம் ஆண்டில் முடிவுறுத்தப்பட்ட வழக்களின் சான்றுப்பொருளாகக் காணப்பட்ட சுமார் 300 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் எரியூட்டி அழிப்பட்டன.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் கட்டளையில், அவரது முன்னிலையில் இந்த சான்றுப்பொருள் அழிப்பு இடம்பெற்றது.
வவுனியா மேல் நீதிமன்ற பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரனின் ஏற்பாட்டில் ஒதுக்குப்புறமான ஓர் இடத்தில் உத்தியோகத்தர்களினால் கஞ்சா போதைப்பொருள் எரியூட்டி அழிக்கப்பட்டன.