ஏற்கனவே டெங்கினால் பாதிக்கப்பட்டோர் அவதானமாக செயற்படுங்கள்!வைத்தியர் யமுனாநந்தா,

0
136

ஏற்கனவே டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மீளவும் காய்ச்சல் ஏற்படும்போது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்என யாழ்  போதனா வைத்தியசாலையின்பிரதிப் பணிப்பாளர் யமுனானந்தா

தெரிவித்தார் .

யாழ்ப்பாணத்தில் டெங்கு நிலைமை தொடர்பில் டான் செய்திப்பிரிவுக்கு கருத்து தெரிவிக்கும்  போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

யாழ்போதனா வைத்தியசாலையில் இன்றைய நிலையில் 86 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்

 கடந்த சில வாரங்களாக டெங்கு நோயாளர்களின் தொகை 150 தொடக்கம் 200 வரை இருந்தது கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் 314 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். 

இன்றைய வருடத்தில் ஜனவரி மாதத்தில் மாத்திரம் 1450  பேர் டெங்கு நோய்க்கு சிகிச்சை பெற்றிருக்கின்றார்கள் எனவே கடந்த வருடத்தை விட 500% அதிகரித்துள்ளது

 பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் அத்தோடு டெங்கு தொடர்பில்  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.

 தற்பொழுது யாழ்ப்பாணத்தில் ஆலய திருவிழாக்கள் ஆரம்பமாகி இடம்பெறுகின்றது. எனவே மாலை நேரங்களில் ஆலயத்திற்கு செல்லும் போது அச்சூழலில் டெங்கு நோய் பரப்பக்கூடிய நுளம்புகளின் தாக்கத்துக்கு உள்ளாகலாம் எனவே அடுத்த ஒரு மாதத்திற்கு ஆலய சுற்றாடலை மிகவும் அவதானமாக வைத்திருக்க வேண்டும் 

அதேபோல எதிர்வரும் வாரத்தில் பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளன எனவே பாடசாலை சுற்றாடலையும்  மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்

 இந்த இரண்டு விழிப்புணர்வுகளும் தற்போதைய சூழ்நிலையில் தேவை ஏனெனில் டெங்கு நோயினை கட்டுப்படுத்துவது முக்கியமாகும்

 ஏனெனில் கடந்த வருடம் தை மாதத்தில் பத்துக்கு மேற்பட்ட நோயாளர்கள் மாத்திரம் தான் தினமும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்கள் ஆனால் இந்த வருடம் 100க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று தற்போது 86 ஆக குறைவடைந்துள்ளது 

எனவே  விழிப்புணர்வை மேற்கொள்வதன் மூலமேஇதனை குறைக்கலாம்

  டெங்கு நோய் தொற்றுக்குள்ளாகுவோர் உடனடியாக தங்களை மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் ஓய்வு எடுத்தல் வேண்டும் கடினமான வேலை செய்ய கூடாது

 குறிப்பாக முன்னைய காலங்களில் சிறுவர்கள் பாடசாலை மாணவர்களுக்கு தான் டெங்கு நோய் பாதிப்புஏற்பட்டது. 

ஆனால்தற்போது  அதிகளவிளான நோயாளர்கள் குடும்ப தலைவர்கள் தான் இந்த டெங்கு நோயினால் பாதிக்கப்படுகின்றார்கள்

 அதாவது குடும்பத்தின் வேலை காரணமாக காய்ச்சல் இன காய்ச்சலாக இனம் காணப்படும் போதும் குடும்ப வேலைகளை செய்து இருக்கும்போது அதனை பாரிய தாக்கத்திற்கு உள்ளாக குறிப்பாக நீரிழப்பு காய்ச்சல் வரும்போது உணவு பருப்பும் வரும் நீர் அருந்தாமல் ஏற்படும் அப்பொழுது அவர்கள் நீரிழப்பு கூடியதாக ஏற்படும்போது மயக்கம் அடைந்த தன்மை ஏற்படுகின்றது காய்ச்சல் வரும் பொழுது வைத்திய பரிசோதனை செய்து குருதி அளவை கவனிக்க வேண்டும் ஓய்வெடுத்துக் கொள்ளவேண்டும்

ஏற்கனவே டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மீளவும் காய்ச்சல் ஏற்படும்போது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் அவர்களுக்கு டெங்கு நோயின் பாதிப்பு இரண்டாவது தடவை மூன்றாவது தடவை வரும்போது அதிகமாக ஏற்படலாம் அதேபோல அவர்களின் உணவு பழக்கங்கள் மிக முக்கியமானது ஆரோக்கியமான உணவு பழக்கங்களை அவர்கள் கைக்கொள்ள வேண்டும்,

 அதேபோல அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியானது குறைவாக காணப்படக்கூடும் எனவே அவர்கள் தங்களுடைய உணவுப் பழக்கங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.