மட்டக்களப்பு காத்தான்குடி அன்வர் பள்ளிவாயல் அல்குர்ஆன் மத்ராசாவின் வருடாந்த பரிசளிப்பு விழா

0
109

மட்டக்களப்பு காத்தான்குடி புதிய காத்தான்குடி அன்வர் பள்ளிவாயல் அல்குர்ஆன் மத்ராசாவின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று
மாலை பள்ளிவாயல் ம்ண்டபத்தில் இடம் பெற்றது.
பள்ளிவாயலின் தலைவர் எம்.எல்.எம்.ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், காத்தான்குடி அல்குர்ஆன் அபிவிருத்திச் சபையின் தலைவர் மௌலவி எம்.ஐ.எம்.ஆதம் லெவ்வை செயலாளர் எஸ்.எல்.ஏ.கபூர் உட்பட பள்ளிவாயல நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் என பலரும்
கலந்து கொண்டனர்.
கடந்த வருடம் புனித அல்குர்ஆன் பரீட்சையில் சித்தியடைந்த இந்த மத்ரசா மாணவர்கள் மற்றும் முஅல்லிம்கள் பாராட்டி பரிசு மற்றும் நினைவுச்சின்னம் வழங்கி
கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன.
இதில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.