இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு – கிழக்கு திருமாவட்ட அவையின் 14 வது தலைவராக அருள் திரு.அருளானந்தம் சாமுவேல் சுபேந்திரன்
தெரிவு செய்யப்பட்டார்
இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு – கிழக்கு திருமாவட்ட அவைத் தலைவராக நியமனம் செய்யும் வழிபாடு இன்று புளியந்தீவு மெதடிஸ்த ஆலயத்தில் இலங்கை
மெதடிஸ்த திருச்சபையின் மகாசங்க தலைவர் டபிள்யு.பி. எபநேசர் ஜோசப் தலைமையில் நடைபெற்றது
ஆரம்ப நிகழ்வாக ஆரம்பபவனி, மட்டக்களப்பின் முதல் மெதடிஸ்த மிஷனரியான அருள்திரு.வில்லியம் ஓல்ட்டிற்கு, காந்தி பூங்காவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள திருஉருவச்சிலைக்கு
அருகிலிருந்து ஆரம்பமானது
சிறப்பு வழிபாட்டு நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் மற்றும் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் தலைவர், செயலாளர்,
வடக்கு – கிழக்கு, மத்திய,தென் மறைமாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் அருட்;பணியாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட திருச்சபை ஒன்றியத்தினர் மற்றும்
அரச அதிகாரிகள், திருச்சபை மக்கள் என பலரும் பங்குபற்றினர்.
Home கிழக்கு செய்திகள் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு – கிழக்கு திருமாவட்ட அவைக்கு புதிய தலைவர் தெரிவு