அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தார் சாந்தனின் தாயார்!

0
127

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு 32 வருட சிறைத்தண்டனையின் பின் விடுதலையான சாந்தனை, நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுப்பதாக, உறவினர்களிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

சாந்தனை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி, ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

சுகயீனம் காரணமாக சாந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் தாய் மற்றும் சகோதர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று சந்தித்து, சாந்தன் நாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர்.

இதன்போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானநந்தா குறித்த உறுதி மொழியை வழங்கினார்.