யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று

0
111

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில், இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில், சுமார் 60 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்ட தென்மராட்சி பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்பட்டது.

பிரதேச செயலாளரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற கூட்டத்தில், இவ்வாண்டு வரவு செலவுத்திட்ட நிதி ஊடாக, பிரதேசத்திற்கு ஒதுக்கப்படும் நிதி, அந்த அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் முன்னைய வேலைத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.