வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக, மரத்தில் ஏறி, ஒருவர் போராட்டம்

0
188

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயத்தில், கடவுச்சீட்டு பெறச் சென்ற நபர் ஒருவர், காரியாலயம் முன்பாக உள்ள மரம் ஒன்றில் திடீரென ஏறி, உயிரை மாய்க்கப்போவதாக கூறியதால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

திருகோணமலை மஹாயபுர பகுதியைச் சேர்ந்த, 51 வயதான அநுரகுமார என்பவர், கடந்த மூன்று தினங்களாக, வவுனியாவில் உள்ள கடவுச்சீட்டு காரியாலயத்திற்கு, கடவுச்சீட்டு பெறுவதற்காக சென்றதாகவும், எனினும் கடவுச்சீட்டை பெற முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த குறித்த நபர், கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக இருந்த மரத்தில் ஏறி, தற்கொலை செய்வேன் எனக்கூறி, போராட்டத்தை முன்னெடுத்தார்.

அதனையடுத்து, காரியாலய உத்தியோகத்தர்கள், இன்று, கடவுச்சீட்டு பெறுவதற்கான உத்தரவாதத்தை வழங்கிய நிலையில் அந்நபர் மரத்திலிருந்து கீழே இறங்கினார்.