பொலிஸாரின் உத்தரவை மீறி, அதிவேகமாகச் சென்ற பேருந்தின் சாரதி உட்பட மூவர் கைது

0
84

புத்தளத்தில் இருந்து அநுராதபுரம் நோக்கி, அதிவேகமாகச் சென்ற தனியார் பேருந்தின் சாரதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரவு நேரத்தில், போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், அதிவேகமாக சென்ற குறித்த பேருந்தை நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ள நிலையில், சாரதி, பொலிஸாரின் உத்தரவை மீறி, பேருந்தை அதிவேகமாக செலுத்தியுள்ளார்.

அதனையடுத்து, பேருந்தை துரத்திச் சென்ற பொலிஸார், அதனை நிறுத்தி சோதனையிட்ட போது, பேருந்து சாரதி, கொலை மிரட்டல் விடுத்து தப்பிச்செல்ல தயாரானதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரிபேவ பிரதேசத்தில் வசிக்கும் பேருந்து சாரதி, வெயாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் பேருந்து உரிமையாளர், அதே பிரதேசத்தில் வசிக்கும் அவரது நண்பர் ஆகியோர், இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.