மட்டக்களப்பு வாகரை சாளம்பைக்குளத்தை அண்டிய பகுதிகளில் மரநடுகை

0
132

நீண்டகாலப் பயன்தரும் 20ஆயிரம் மரங்களை நாட்டும் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள சாளம்பைக் குளத்தைச்
சூழவுள்ள பகுதிகளில் தேக்கு, சமுளை போன்ற 500 மரக் கன்றுகள் நாட்டப்பட்டன.
காலநிலை மாற்ற சவால்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இத்திட்டம் சுமார் 3 மில்லியன் ரூபாய் செலவில் அமுல்ப்படுத்தப்படுகிறது. சமூக, பொருளாதார, அபிவிருத்திக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் சுற்றுச் சூழல் பாதுகாப்பை விருத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இன்றைய தினம் சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.பானுப்பிரியா, கிராம அலுவலர் எஸ்.விஜயராஜன் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் களப் பணியாளர்களான
எஸ்.நவிர்ணநாதன், ஏ. சஞ்ஜித் உட்பட பலரும் மர நடுகை நிகழ்வில் கலந்து கொண்டனர்.