மட்டக்களப்பு ம.தென் எருவில்பற்று பி.செயலகத்தில் சர்வதேச தாய்மொழி தின நிகழ்வு

0
80

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பட்டில் சர்வதேச தாய்மொழி தின நிகழ்வு பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில்
சிறப்பாக இடம்பெற்றது.
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்,
‘நம் தாய்மொழியை பேணுதல் ஒரு பன்முக நோக்கு’ எனும் தலைப்பில்; தென்கிழக்கு பல்கலைக்கழக உதவி பதிவாளர் சஞ்சீவி சிவகுமாரினால்
சிறப்புரை நிகழ்த்தப்பட்டதுடன், பிரதேச கலைஞர்களின் பாடல்கள் மற்றும் கலைக்கழக மாணவர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.
‘தற்காலத்தில் தமிழ்மொழி வளர்கிறது தற்காலத்தில் தமிழ்மொழி தளர்கிறது’ எனும் தலைப்பில் கதிரவன் பட்டிமன்ற பேரவையினால் சிறப்பு பட்டிமன்றமும் இடம்பெற்றது.
நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகௌரி தரணிதரன், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவல உத்தியோகத்தர்கள்
என பலரும் கலந்துகொண்டனர்.