வடக்கு, கிழக்கு மாகாண சிவில் சமூக குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் கருத்தாய்வு இடம்பெறவுள்ளது.
இன்று மாலை 04 மணிக்கு, ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வது எப்படி? எனும் தலைப்பில் கருத்தாய்வு இடம்பெறவுள்ளது.
இதன்போது, பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம், யதீந்திரா, மரியாம்பிள்ளை செல்வின் இரேனியஸ் ஆகியோர் கருத்துரைகளை முன்வைப்பர்.
‘தேர்தலை எதிர்கொள்வது எப்படி? ஏன்?’ என்ற தலைப்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கருத்துரைப்பார்கள் என ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.