இலங்கைக்கான அமெரிக்க பிரதி உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு காத்தான்குடிக்கு விஜயம்

0
115

மட்டக்களப்பு காத்தான்குடி சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு இலங்கைக்கான அமெரிக்க பிரதி உயர்ஸ்தானிகர் டக்ளஸ் இ சொனக
நேற்று மாலை விஜயம் செய்தார்
புனித நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்விலும் அமெரிக்க பிரதி உயர்ஸ்தானிகர் டக்லஸ் இ சொனக் கலந்து
கொண்டார்
காத்தான்குடி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் ஐ.எல். எம். உபைத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், காத்தான்குடி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் செயற்பாடுகள்
அதன் வேலைத்திட்டங்கள் தொடர்பான விபரங்கள் இதன் போது அமெரிக்க பிரதி உயர்ஸ்தானிகருக்கு தெரிவிக்கப்பட்டது.
காத்தான்குடி சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மிகவும் சிறப்பாக இருப்பதாகவும், இங்கு உள்ள மாணவர்கள் வினைத்திறன் மிக்க மாணவர்களாக
காணப்படுவதாகவும், மாணவர்களின் செயற்பாடுகள் அவர்களின் முன்னேற்றத்தை காட்டுகிறது என்றும் அமெரிக்க பிரதி உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.
புனித நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டமை மகிழ்ச்சியளிப்பதாகவும், அவர் சுட்டிக்காட்;டினார்.
நிகழ்வில் சிவில் சமூக செயற்பாட்டாளர் ஏ.எல்.எம்.சபீல் நழீமி, காத்தான்குடி சிறுவர் இல்ல நிருவாகிகள் முக்கியஸ்தர்கள், அமெரிக்க தூதரக அதிகாரிகள்
என பலர் கலந்து கொண்டனர்