அம்பாறை திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் சேவைகள் கடந்த திங்கட் கிழமை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில்,நோயாளிகளின் நலன்களைக்
கருத்திற்கொண்டு, வைத்திய சேவையை மீள ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கோவிலில் பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்த சம்பவத்தின் பின்னர், வைத்தியசாலை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களையடுத்து,
வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் சிகிச்சைகளைப் பெற்றுவரும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையால்,
அவசர நோய் நிலைமைகளுக்காக, வைத்தியசாலைக்கு வருகை தருவோர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்படுகின்றனர்.
இவ்விடயம் உயிராபத்துக்களை ஏற்படுத்தக் கூடும் என குறிப்பிடும் மக்கள், சம்பந்தப்பட்ட தரப்புக்கள், திருக்கோவில் ஆதார வைத்தியசாலை, வைத்தியர்களோடு
பேசி, மீண்டும் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Home கிழக்கு செய்திகள் அம்பாறை திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் சேவைகள் ஸ்தம்பிதம்: நோயாளர்கள் அவதி