நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கப் போவதில்லை: மைத்திரி

0
95

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கப்போவதில்லை என மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரியப்படுத்தியுள்ளார்.
நேற்று தனது சட்டத்தரணி சந்தீப்த சூரியாரச்சி ஊடாக நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்த மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், தமது தரப்பு சேவை பெறுநர் சம்பவம் தொடர்பில் விரிவான வாக்குமூலத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வழங்கியுள்ளதாகவும். இதன் காரணமாக நீதிமன்றத்தில் முன்னிலையாகி மீண்டும் வாக்குமூலம் வழங்க இயலாது எனவும் மைத்திரிபயின் சட்டத்தரணி நேற்று நீதிமன்றில் தெரிவித்தார்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், ஏற்கனவே அறிவிக்கப்பட்டமைக்கு அமைய இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்
துக்கொள்ளப்படும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டிய அவசியமில்லை எனவும் அறிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மைத்திரிபால சிறிசேன, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வழங்கிய வாக்குமூலத்துக்கு அமைவாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்குமாறு, மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.