புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும், அம்பாறை மருதமுனை கடற்கரை திறந்த
வெளியில் நடைபெற்றது.
மருதமுனை தாறுல் ஹூதா மகளிர் இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி எம்.எல்.எம்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார்.
ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை,கல்முனை, சம்மாந்துறை ,நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில், உள்ளிட்ட முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும்
பெருநாள் தொழுகைகள் பரவலாக இடம்பெற்றன.
மட்டக்களப்பு காத்தான்குடியில் நோன்பு பெருநாள் சிறப்புத் தொழுகை இன்று காலை காத்தான்குடி கடற்கரையில்
நடைபெற்றது.
காத்தான்குடி இஸ்லாமிக் சென்ரரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பெருநாள் தொழுகையில், பெருநாள் குத்பா பிரசங்கத்தை அஷ்ஷெய்க் ஏ.எம்.எம்.அன்சார்
மதனி நடாத்தினார்.
பள்ளி வாயல்களிலும் நோன்பு பெருநாள் சிறப்புத் தொழுகை இடம்பெற்றன.
ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி மைதானத்தில் புனித நோன்புப் பெருநாள் மைதானத் தொழுகை இன்று காலை நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் தொழுகைக்காக மைதானத் திடலில் திரண்டு தொழுகையை நிறைவேற்றினர்.
வழமையை விட இவ்வருடம் புனித நோன்புப் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற அதிக எண்ணிக்கையிலானோர் கூடியிருந்தனர்.
இன்று காலை மட்டக்களப்பு ஜாமி உஸ் ஸலாம் ஜும் ஆ பள்ளிவாசலில் விசேட தொழுகையும், துவா பிரத்தினைகளும் மௌலவி ஹாபிஸ் மொகமட் நியாஸ் தலைமையில்
நடைபெற்றன.
விசேட பெருநாள் தொழுகை பிராத்தனையில் மட்டக்களப்பு நகரில் வசிக்கும் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிய பின் அனைவரும் தமது நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும்
நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொண்டனர் .
உணவு பண்டங்களை பகிர்ந்து உண்டனர்