குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், புதிய வீசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையைச் செயல்படுத்தும் பணியை இன்று முதல் ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஜே.இலுக்பிட்டிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.