யாழ் மணிக்கூட்டு கோபுரம் தொடக்கம் பண்ணை வரையான பகுதியை தூய்மையான சுற்றுலா வலயமாக்கும் கலந்துரையாடல் யாழிலுள்ள தனியார் விடுதியில் நேற்று இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில், யாழ்.மாநகர சபை ஆணையாளர் எஸ்.கிருஸ்னேந்திரன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் கவிதா, சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கோடீஸ்வரன் றுசாங்கன் மற்றும் தனியார் விருந்தினர் விடுதிகளின் உரிமையாளர்கள் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.