யாழில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் மே தின நிகழ்வு!

0
99

அரசின் அடக்குமுறைகளை உடைத்தெறிவோம்’ எனும் தொனிப்பொருளில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் மே தின நிகழ்வு யாழ்ப்பாணம் – மானிப்பாய் பிரதேச சபையின் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான திருமதி செல்வி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான சபா.குகதாஸ், கஜதீபன், ரெலோவின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.