நாகப்பட்டினம்-காங்கேசன்துறைகப்பல் சேவைமே 13 ல் ஆரம்பம்

0
99

இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் 13 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகரகத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடப்பட்டு இந்திய கப்பல் கூட்டுத்தாபனத்தினால் தெரிவுசெய்யப்பட்ட தனியார் நிறுவனம் இந்தக் கப்பல் சேவையை முன்னெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையை மேலும் இலகுபடுத்துவதற்காக மாதாந்தம் 25 மில்லியன் ரூபா என்ற அடிப்படையில் ஒரு வருடத்துக்கான செலவை இந்திய அரசாங்கம் ஏற்கும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்பதற்காக இந்திய அரசாங்கம் 63.65 அமெரிக்க டொலர் நிதியை இலங்கைக்கு மானிய அடிப்படையில் வழங்கியுள்ளது.


இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான இந்தியாவின் வலுவான அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பு காரணமாக இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகரகத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.