பிரதான தொடருந்து மார்க்கத்தின் தொடருந்து சேவை பாதிப்பு!

0
56

தொடருந்து ஒன்றில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிரதான மார்க்கத்தில் தொடருந்துச் சேவை தாமதமடைந்துள்ளதாக தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீரிகமையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து ஒன்று கம்பஹா தொடருந்து நிலையத்திற்கு அருகே தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரதான மார்க்கத்தில் தொடருந்துச் சேவைகளை வழமைக்குக் கொண்டு வரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொடருந்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.