சஜித் பிரேமதாஸ, தமிழ் அரசு கட்சி சந்திப்பு!

0
98

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான குழுவினருக்கும் இலங்கை தமிழ் அரசு கட்சியினருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பணிமனையில் சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பில், தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாண சபை அவைத்
தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், நிர்வாக செயலாளர் சே.குலநாயகம் ஆகியோர் பங்கேற்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவும் கூட்டத்தில் பங்கேற்றார்.