யாழில் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர், தடுப்புக் காவலில் வைப்பு!

0
120

யாழ்ப்பாண மாவட்டத்தில், அண்மைக் காலமாக இடம்பெற்ற பல்வேறு வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர், எதிர்வரும் 14 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு வன்முறை சம்பவங்கள், கடைகள் எரிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய, 24 வயதான சந்தேக நபர், உடுவில் பகுதியில்,
யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடம் இருந்து, கார், மோட்டார் சைக்கிள், தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, வாள்கள் என்பன மீட்கப்பட்டன.

சந்தேக நபர், நேற்று, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில், பொலிஸாரால் முற்படுத்தப்பட்ட போது, சந்தேக நபரை, எதிர்வரும் 14 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்க, நீதிவான் உத்தரவிட்டார்.
வெளிநாட்டில் உள்ள நபரொருவர் மூலம் பணம் பெற்று, வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த ஒருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
குறித்த வன்முறை கும்பலைச் சேர்ந்த மேலும் 5 பேரை கைது செய்ய, பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.