இலங்கை மத்திய வங்கியின் திட்டம்

0
89

இலங்கை மத்திய வங்கி இந்த முறையும் வட்டி வீதங்களை மாறாத நிலையில் பேணுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணைநில் வைப்பு வட்டி வீதம் 8.5 சதவீதமாகவும், துணைநில் கடன் வட்டி வீதம் 9.5 சதவீதமாகவும் நிலவுகிறது.
நாளைய தினம் மத்திய வங்கியின் நாணயச் சபை கூடி, வட்டி வீதங்கள் குறித்த தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளது.
எனினும், நாட்டின் நாணயச் சந்தையின் ஸ்திரத்தன்மையைக் கருதி, இந்த முறையும் வட்டி வீதத்தை மாற்றாமல் பேணுவதற்குத் தீர்மானிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.