அனுரகுமார – ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

0
92
ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சுகே யொசிபுமிக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் நிலவுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக இருந்து வருகின்ற நட்புறவு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளின் அடுத்தகட்ட நகர்வுகள் சம்பந்தமாகவும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாகத் தேசிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.