யாழில் கோர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த பெண்!

0
94

யாழ்ப்பாணம் – மானிப்பாய் கட்டுடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்றைய தினம் (25-07-2024) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை வாகனம் ஒன்று மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் நிச்சாமம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை மானிப்பாய் பொலிஸார் வாகனம் செலுத்தி சென்ற சாரதியை விட்டு விட்டு வீதியில் சென்ற வேறொருவரை கைது செய்து வைத்திருந்ததால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.