ஜனாதிபதித் தேர்தலில் 50 ஆயிரம் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த எதிர்பார்ப்பு!

0
41

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில்,50 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக,ஜனாதிபதித் தேர்தலுக்குப் பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை, ஏற்கனவே கணக்கிடப்பட்டு வருகின்றது.வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படும் எண்ணிக்கை, பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்வது தொடர்பான பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய பாதுகாப்பு கடமைகள் என்பவற்றில், பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.