வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயற்சி:ஒருவர் கைது!

0
93

சட்டவிரோதமான முறையில் 18 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் பயணப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 12 ஆயிரம் வெளிநாட்டுத் தயாரிப்பிலான சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதானவர் கல்முனை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.