கிளிநொச்சியில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

0
86

கிளிநொச்சி – பளை மத்திய கல்லூரியில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான மருத்துவ முகாம் ஒன்று இன்று காலை இடம்பெற்றது.

பளை மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் விசேட தேவையுடைய மாணவர்களின் உடல் நிலையை பரிசோதிப்பதற்காக குறித்த மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வைத்தியர் எஸ்.அருமைத்துரை, விசேட தேவையுடைய மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டார்.