யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மற்றும் இந்தியா தமிழ்நாடு நாகபட்டினத்திற்கான கப்பல் சேவை, இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அந்தவகையில், பயணிகள் சேவையில் ஈடுபடும் சிவகங்கை கப்பல், 41 பயணிகளுடன், நாகபட்டினம் துறைமுகத்தில் இருந்து இன்று காலை புறப்பட்டு, மாலை வேளையில், காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்தக் குழுவினரையும் கப்பலையும், யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவர் மற்றும் அவரது குழுவினர் வரவேற்றனர்.இந்தக் கப்பல், காங்கேசன்துறை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, நாளை காலை, இங்கிருந்து நாகபட்டினம் துறைமுகத்தை நோக்கி புறப்படவுள்ளது.



